மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா


மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா
x

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நாளை நடக்கிறது.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நாளை நடக்கிறது.

மகா மாரியம்மன்

வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து 12-ந் தேதி முதல் காப்பு கட்டுதல் மற்றும் 19-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் அம்மன் வீதிஉலா காட்சியும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக் காவடி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நோயால் பாதிக்கப்பட்டவா்கள் நோய் குணமடைந்த உடன் பாடைக்காவடி விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

இதன்படி நோயிலிருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து, பின்னர் இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

பாடைக் காவடி

பின்னர் அந்த பாடைக்காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கிக்கொண்டு வருவார்கள். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மகாமாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வருவார்கள் . இதில் பக்தர்கள் பாடை காவடிகள், பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளர். ேபரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவன்நேசன், செயல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மணவழகன் தலைமையில் வலங்கைமான் மகாமாரியம்மன் ேகாவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.


Next Story