எருது விடும் விழா


எருது விடும் விழா
x
தினத்தந்தி 6 March 2023 12:15 AM IST (Updated: 6 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 30 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே 500 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 30 பேர் காயம் அடைந்தனர்.

எருது விடும் விழா

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி துர்கம் கிராமத்தில் மல்லிகார்ஜூன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகா மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன.

முன்னதாக மல்லிகார்ஜூன சாமி கோவிலில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. எருது விடும் விழாவை பொதுமக்கள் காண திடலின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. பின்னர் காளைகள் விழா மைதானத்தில் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

30 பேர் காயம்

சீறிபாய்ந்து வந்த காளைகளை அங்கு திரண்டு இருந்த இளைஞர்கள் அடக்கி அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை பறித்தனர். அப்போது காளைகள் முட்டியும், கீழே விழுந்தும் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

விழாவையொட்டி தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story