எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்


எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பி.திப்பனப்பள்ளியில் நடந்த எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி

பி.திப்பனப்பள்ளியில் நடந்த எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் களைகளை ஒரு குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு நேரம் கடந்து களைகள் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிடப்பட்டு, குறைந்த நேரத்தில் ஓடும் களைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக களைகளை அதன் உரிமையாளர்கள் பல பயிற்சிகள் அளித்து, அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.திப்பனப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து காளைகளுக்கு அங்குள்ள கோவிலில் பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஒவ்வொரு எருதாக அவிழ்த்து விடப்பட்டன. எருதுகளை மந்தையில் ஓட விடப்பட்டன. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டினர்.

பரிசுகள்

விழாவையொட்டி ஸ்டாப் வாட்ச் மூலம் குறைந்த நேரத்தில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. அதன்படி, முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.35 ஆயிரம்,4-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். மேலும் விழாவின் போது அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க குருபரப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story