எருது விடும் விழா


எருது விடும் விழா
x

வடமதுரை அருகே கோவில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா நடந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே கெச்சானிபட்டியில் உள்ள விநாயகர், வெங்கடேச பெருமாள், திம்மம்மாள், பாப்பம்மாள் கோவில்களில் பெரிய கும்பிடு விழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி விநாயகர், வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன்களுக்கு தினமும் பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவில் கும்மியாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா இறுதி நாளான நேற்று, சலக்கருது ஓட்டம் என்ற எருது விடும் விழா நடந்தது. இதையொட்டி கொத்துக்கொம்பு என்ற இடத்தில் இருந்து கோவில் வரை காளைகள் ஓட விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்து ஓடி வெற்றி பெற்ற காளைகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் திருவிழாவையொட்டி நேற்று மாலை வரை கோவில் அருகே பொதுவிருந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story