ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை


ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
x

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மாட்டுத்தாவணி

நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சந்தையில் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

இந்த சந்தையில் விற்பனைக்கு 27 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் 20 மாடுகள் ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக இன மயிலை பசுமாடு ஒன்று ரூ.60 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற குதிரை, மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதனால் பழைய கோட்டை மாட்டுத்தாவணி காங்கயம் இன கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து கணிசமாக குறைந்து உள்ளது.


Related Tags :
Next Story