சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்


சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம்
x

நெல்லையில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் ரத வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில், நேற்று தூய்மை பணியாளர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையப்பர் கோவில் முன்பு சுற்றி திரிந்த 3 மாடுகளை பிடித்து நெல்லை தாலுகா அலுவலகத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர்கள் ஒவ்வொரு மாடுகளுக்கும் தலா ரூ.1000 அபராதமாக செலுத்தி மாடுகளை கூட்டிச் சென்றனர். அவ்வாறு அபராதம் செலுத்தி பெற்றுக் கொள்ள தவறினால் மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மாடு பிடிக்கும் பணியை மேஸ்திரி சிவக்குமார் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் முத்துராஜ், சேக், உதவி மேஸ்திரிகள் அருணாச்சலம், ஆறுமுகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர்.


Next Story