மேல்விஷாரம் நகராட்சி நடத்திய நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்


மேல்விஷாரம் நகராட்சி நடத்திய நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
x

மேல்விஷாரம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மேல்விஷாரம் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடந்தது.

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி 'என் குப்பை என் பொறுப்பு என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வுக்கான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முஹம்மது அமீன் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தையும் மஞ்சப்பை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பிரீத்தி, நகர மன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்திட்டனர். இதில் நகராட்சி பொறியாளர் பாபு, துப்புரவு ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story