மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பரமசிவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.13,848 சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு கொரோனா காலக்கட்டத்தில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க மாவட்ட தலைவர் மணி, துணைத்தலைவர் மாடசாமி, நிர்வாகிகள் செந்தில் வேல்முருகன், சிவசூரியமலர், அய்யப்பன், பேச்சிமுத்து, பொன்னுத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story