விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் இளையராஜா வரவேற்றார். பொருளாளர் ரத்தினம், தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் அந்தோணிதாஸ் நிறைவுரையாற்றினார்.
மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி இயக்குபவருக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி மாத சம்பளம் ரூ.13,848-ம், கொரோனா ஊக்கத்தொகை மற்றும் தூய்மைப்பணியாளர், தூய்மைக்காவலர்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ஸ்ரீராமலு, நீலமேகம், அன்பு, சந்திரசேகர், முருகன், குமார், குணசேகரன், சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கற்பகம் நன்றி கூறினார்.