அதிசயபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு


அதிசயபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அதிசயபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைக்கப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவையில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிசயபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.16.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு புத்தன்தருவை ஊராட்சி தலைவர் சுலைக்கா பீவி, அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டியும், புதிய நீர்த்தேக்க தொட்டியை திறந்தும் வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.

நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், பிரபு, ரமேஷ்பிரபு, கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story