'சமூக நீதிக்கொடி உயர பறப்பதை உறுதி செய்வதே வி.பி.சிங்கிற்கு செலுத்தும் மரியாதை' - அன்புமணி ராமதாஸ்


சமூக நீதிக்கொடி உயர பறப்பதை உறுதி செய்வதே வி.பி.சிங்கிற்கு செலுத்தும் மரியாதை - அன்புமணி ராமதாஸ்
x

சமூகநீதிக் கொடியை உயரப் பறக்கச் செய்வதே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கிற்கு முழு உருவச் சிலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நீதிக்கொடி உயர பறப்பதை உறுதி செய்வதே வி.பி.சிங்கிற்கு செலுத்தும் மரியாதை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் சமூகநீதியை தழைக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்களில் அண்ணல் அம்பேத்கருக்கு அடுத்த முதன்மையானவர் வி.பி.சிங். அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடு முக்கியம் என்பதை உணர்ந்து மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியவர் அவர்.

வி.பி.சிங் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சமூகநீதி தழைக்கவும், சமூகநீதிக் கொடி உயரப் பறப்பதை உறுதி செய்யவும் நாம் உழைக்க வேண்டும். அதுவே சமூகநீதி நாயகனுக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




Next Story