வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
வெளிமாநில தொழிலாளர்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிமாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் தங்களது சோந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் ரேஷன் அட்டை பெற இ-ஷ்ராம் (eShram) என்ற இணையத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்க அலுவலர் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும்.
இதைபோல தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம். ரேஷன் அட்டை வேண்டி அளிக்கும் மனுவை வட்ட வழங்கல் அலுவலர்கள் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து பின்னர் தழிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை பெற்றவுடன் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.