அங்கக வேளாண் சாகுபடி பயிற்சி முகாம்
பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு அங்கக வேளாண் சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள அலிவலம் கிராமத்தில், 20 விவசாயிகள் கொண்ட குழுவுக்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கக வேளாண் சாகுபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.பயிற்சியில், அங்கக சான்று பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் திரவ இயற்கை உரங்கள், பூச்சி விரட்டி தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. திட்டக்குழு உறுப்பினரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான அலிவலம் மூர்த்தி, அலிவலம் ஊராட்சி தலைவர் ஆசைத்தம்பி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கவிதா, ரேவதி, வர்சா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story