தமிழகத்தில் ஏப்ரல் 28-க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு..!
தமிழகத்தில் ஏப்ரல் 28-க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 12,11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. நேற்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1-3 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி வரை தேர்வு நடத்த வேண்டும் என்றும் 4-9 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10 முதல் 28-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story