ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரி மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்


ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரி மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்
x

ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரி மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஒரத்தநாடு செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவை இணைந்து சர்வதேச சைக்கிள் தினத்தை முன்னிட்டு பசுமை ஆற்றல்- ஆரோக்கிய இந்திய இயக்கம் என்ற தலைப்பில் சைக்கிள் ஊர்வலத்தை ஒரத்தநாட்டில் நடத்தின. இந்த ஊர்வலத்துக்கு . ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் நர்மதா தலைமை தாங்கினார். ஊர்வலத்தை ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் ராஜமாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா, டாக்டர்கள் வெற்றிவேந்தன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் பற்றிய பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் 100 நாட்டு நலப்பணி திட்ட ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story