லைவ் அப்டேட்ஸ்: ஏட்டிக்கு போட்டி :எடப்பாடி, கே.பி.முனுசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குகிறேன்" - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு


லைவ் அப்டேட்ஸ்: ஏட்டிக்கு போட்டி :எடப்பாடி, கே.பி.முனுசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குகிறேன் - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2022 9:19 AM IST (Updated: 11 July 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


Live Updates

  • 11 July 2022 12:38 PM IST

    ஏட்டிக்கு போட்டி :எடப்பாடி, கே.பி.முனுசாமியை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குகிறேன்” - ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

    ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்தனர். என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கும், கே.பி.முனுசாமிக்கும் அதிகாரம் இல்லை.

    அ.தி.மு.க. விதிகளுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமிக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதாக அறிவிக்கிறேன். அ.தி.மு.க. விதிகளின்படி தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்று நீதியை பெறுவோம்" என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

  • 11 July 2022 11:46 AM IST



  • 11 July 2022 9:52 AM IST



  • 11 July 2022 9:51 AM IST

    ஓ.பன்னீர் செல்வம் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார்- கே.பி.முனுசாமி கண்டனம்

    அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பேட்டி அளித்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி.முனுசாமி

    கூறியதாவது:-

    "அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கடந்த பொதுக் குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓ.பன்னீர் செல்வம் சென்றார். ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார் . நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓ.பன்னீர் செல்வம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.

    ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சசத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

  • 11 July 2022 9:48 AM IST



  • 11 July 2022 9:21 AM IST

    உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓ.பன்னீர் செல்வம் நுழைந்தார். 

  • 11 July 2022 9:20 AM IST

    அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


Next Story