குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சை,
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 24ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கல்லணையை வந்தடைந்தது.
இந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காவிரி மற்றும் வெண்ணாற்றில் தலா 500 கன அடி, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story