ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு


ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
x

ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

ராணிப்பேட்டை

ரேஷன்கடை, அங்கன்வாடி, நெற்களம், வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவ்லாக் ஊராட்சியில் ரேஷன் கடை, பள்ளி வகுப்பறை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், நெற்களம் ஆகியவை ரூ.97.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன.

இந்த கட்டிடங்களை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''நவ்லாக் ஊராட்சியில் கடந்த 2.5 ஆண்டுகளில் ரூ.11 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.64 கோடி மதிப்பில் 128 சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 84 பள்ளிகளில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

நிகழ்ச்சிகளில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட்ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சிவமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story