புதிய ரேஷன் கடைகள் திறப்பு


புதிய ரேஷன் கடைகள் திறப்பு
x

புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது.

கரூர்

அரவக்குறிச்சி வட்டத்தில் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளப்பட்டி -6 என்ற முழுநேர ரேஷன் கடை 1,603 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் இக்கடையில் இருந்து 802 குடும்ப அட்டைகளை பிரித்து பள்ளப்பட்டி ஒலிசாநகரில் புதிய முழுநேர ரேஷன் கடை உருவாக்கப்பட்டது.

மேலும் வேலம்பாடி-1 முழுநேர ரேஷன் கடை 1,271 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இருந்து 270 குடும்ப அட்டைகளை பிரித்து பள்ளப்பட்டி கேர்நகரில் பகுதிநேர ரேஷன் கடை உருவாக்கப்பட்டது. இந்த ரேஷன் கடைகளின் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ தலைமை தாங்கி புதிய ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். கரூர் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளரும், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனருமான அபிராமி முன்னிலை வகித்தார். விழாவில் அரவக்குறிச்சி பொதுவினியோகத்திட்ட கள அலுவலர் விஜி, அரவக்குறிச்சி கள அலுவலர் கனிமொழி, கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் திருப்பதி, பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story