நீர்மோர் பந்தல் திறப்பு
கமுதியில் போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது,
ராமநாதபுரம்
கமுதி,
கமுதி பகுதியில் கடந்த சில நாட்களாக, கடுமையாக வெயில் அடித்து வருகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் மாலை 4 மணி வரை அனல்காற்று வீசி வருவதால், பொதுமக்கள் வெளியே செல்வதை குறைத்து வருகின்றனர். மேலும் வெளியூருக்கு செல்பவர்கள் கமுதி பஸ் நிலையத்தில் நிற்கும் போது, கடுமையான வெயில் தாக்கத்தினால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களது சிரமத்தை குறைக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு மணிகண்டன் ஆலோசனையின் படி, பஸ் நிலையம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் நேற்று நீர்மோர் பந்தல் போலீசார் சார்பில் தொடங்கப்பட்டது. இதனை இன்ஸ்பெக்டர் விமலா தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story