குடிநீர் தொட்டி திறப்பு


குடிநீர் தொட்டி திறப்பு
x
தினத்தந்தி 17 July 2023 12:17 AM IST (Updated: 17 July 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் நகராட்சி கணேஷ் நகர் மற்றும் மாதவ நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருப்பதால் அதனை போக்க அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்துத்தர வேண்டி அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக ஆழ்துளை கிணற்றுடன் கூடிய கூடிய தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொது மக்கள் பயன்பாட்டிற்காக சு.ரவி எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், நகரமன்ற உறுப்பினர்கள் சரவணன், பாபு, வட்ட செயலாளர் வழக்கறிஞர் தியாகராஜன், நிர்வாகிகள் கிருஷ்ணமுர்த்தி, ரகு, பிரபாகரன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story