நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
நாகப்பட்டினம்
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், நாகைமாலி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் அகண்டராவ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கவுசல்யாஇளம்பருதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதாகணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story