அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் திறப்பு
கோவில்பட்டி அருகே அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தொழிலதிபர் ஏ.பிரபாகரன்- லைலா பிரபாகரன் தம்பதியினர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பராபுரத்தில் 2 ஏக்கர் 18 சென்ட் இடத்தை நாடார் மகாஜன சங்கத்திற்கு தானமாக வழங்கினார்கள். இந்த இடத்தில் நாடார் மகாஜன சங்கம் வி.என்.பி.ஆர். அய்யாச்சாமி நாடார்- ராஜரத்தினம் மாள் அகாடமி என்ற பெயரில் மத்திய- மாநில அரசுகளின் வேலைவாய்ப்புக்காக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் நடத்த முடிவெடுத்து கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறும் வகையில் மத்திய- மாநில அரசு, போலீஸ், ராணுவம், வங்கி தேர்வுகளுக்கு பயிற்சிஅளிக்க உள்ளது.
கட்டிடத் திறப்பு விழாவிற்கு சென்னை வாழ் விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தி தருமபண்டு தலைவர் எம்.எம்எஸ். சந்திரமோகன் தலைமை வகித்தார்.
தொழிலதிபர்கள் டி.முரளிதரன், பி.செல்வராஜன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடத்தை டாக்டர் புகழகிரி வடமலையான் திறந்து வைத்தார். லைலா பிரபாகரன், ராஜ் மல்லிகா யோகன், பாரத் ராணி சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றினர். அவனி மாடசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்கம் பொது செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ், அகாடமி செயலாளர் ஆர்.காமராஜ், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயக்குனர்கள் பி.விஜயதுரை, ஜி.அசோக்குமார், தொழில் அதிபர்கள் பி.நல்லதம்பி, எம்.தங்கராஜ், ஆர்.ஜெயபிரகாஷ், என்.ராஜாமணி, எல்.ஞானதுரை, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.ஏ.அய்யனார், டாக்டர் சி.கே.சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மகாஜன சங்க பொருளாளர் டி. நல்லதம்பி நன்றி கூறினார்.