செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
x

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆஸ்பத்திரி ஆகும். இந்த ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் 3 ஆயிரத்து 500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 1,500 பேர் உள் நோயாளியாக பயன்பெற்று வருகின்றனர் ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது. இருதய சிகிச்சைக்கான துறையில் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

நேற்று ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை செய்ய 2 டாக்டர்கள் புதிதாக பணியில் நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் இருதய மற்றும் நுரையீரல் நோய் அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. இதற்கு கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அனிதா தலைமை தாங்கினார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் முன்னிலை வகித்தார், பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.டி.அரசு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மருத்துவமனை கல்லூரி டீன் கே.நாராயணசாமி கலந்துகொண்டு இருதய அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


Next Story