கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!


கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!
x

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் கல்லணைக்கால்வாயில் நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக மே மாத மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கடந்த 24-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

அங்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று கல்லணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கனஅடி வீதமும், கல்லணைக்கால்வாயில் 100 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கல்லணைக்கால்வாயில் சீரமைப்பு பணி, பாலம் கட்டும் பணி என 13 இடங்களில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கல்லணைக்கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.

காவிரியில் வினாடிக்கு 1,250 கனஅடியும், வெண்ணாற்றில் 500 கனஅடியும், கொள்ளிடத்தில் 110 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


Related Tags :
Next Story