ஊட்டி மலர் கண்காட்சி: மழையை பொருட்படுத்தாமல் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்


ஊட்டி மலர் கண்காட்சி: மழையை பொருட்படுத்தாமல் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
x

ஊட்டியில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கண்காட்சி கடந்த 7-ந் தேதி தொடங்கிய நிலையில், மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சி தொடங்கியதை அறிந்து, நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர். கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்காவில் குவிந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர். நேற்று 18 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

2 நாட்களில் மட்டும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். 3-வது நாளாக இன்று காலையும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடந்த சில தினங்களாக ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.


Next Story