30 சதவீத கோதுமை மட்டுமே வினியோகம்
ரேஷன் கடைகளில் 30 சதவீத கோதுமை மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாக கண்காணிப்பு குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ரேஷன் கடைகளில் 30 சதவீத கோதுமை மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாக கண்காணிப்பு குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
கண்காணிப்பு குழு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் பொது வினியோக கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் அழகு சுந்தரம், முகமது எகியா, தமயந்தி, வீரணன், மனோகரன், வழங்கல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை மற்றும் மண் எண்ணெய் 30 சதவீத ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து தகுதி உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கும் வழங்க நடவடிக்கை வேண்டும்.
ஊதியம் வழங்க வேண்டும்
கோட்டூர் ரேஷன் கடை ஊழியருக்கு 8 மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலை உள்ளது. மாதந்தோறும் ஊதிய பட்டுவாடா செய்ய வேண்டும். விருதுநகரில் ெரயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் நடவடிக்கை எடுக்காத நிலை நீடிப்பதாக உறுப்பினர் அழகுசுந்தரம் தெரிவித்தார்.
இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.