ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி


ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி
x

குண்டடம் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர்

குண்டடம் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

சின்ன வெங்காயம் சாகுபடி

குண்டடம் சுற்று வட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம், சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.

அதன்படி தற்போது சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் கிடைக்கிறது.

தற்போது சின்ன வெங்காயத்தின் விலை உயர்த்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை வரை செலவாகிறது.

அறுவடை

100 நாட்களில் அறுவடை செய்யலாம். நல்ல செழித்து வளர்ந்துள்ள பயிர்கள் ஏக்கருக்கு மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். அதேபோல் சின்ன வெங்காயம் தற்சமயம் நல்ல விலைக்கு விற்று வருவதால் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

எதிர்வரும் காலங்களிலும் நல்ல விலைக்கு விற்றால் லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story