நன்னடத்தை மீறி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை


நன்னடத்தை மீறி    கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நன்னடத்தை பிணையை மீறி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

நெய்வேலி அருகே உள்ள செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ராஜ்குமார் (வயது 26). சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் விக்னேஷ்(26). இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் நெய்வேலி தெர்மல் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரையும் விருத்தாசலம் சப்-கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் நன்னடத்தை காரணமாக ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி அன்று நெய்வேலியில் நடந்த சதீஷ்குமார் கொலை சம்பவத்தில் ராஜ்குமாருக்கும், விக்னேசுக்கும் தொடர்பு இருப்பது தெர்மல் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி நன்னடத்டதை பிணை மீறிய குற்றத்துக்காக அவர்கள் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதித்த ஆணையை நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சிறை அலுவலர்கள் மூலம் ராஜ்குமார், விக்னேஷ் ஆகியோரிடம் வழங்கினர்.


Next Story