திருத்தணியில் விபசார வழக்கில் மேலும் ஒரு பெண் கைது


திருத்தணியில் விபசார வழக்கில் மேலும் ஒரு பெண் கைது
x

திருத்தணியில் விபசார வழக்கில் மேலும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் தெருவில் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக திருத்தணி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 30-ந் தேதி ஜெ.ஜெ.நகர் தெருவில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திக்கொண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்ணிடம் விசாரித்தபோது, வேலை தருவதாகக் கூறி வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தனர். பின்னர் 3 பெண்களையும் போலீசார் எச்சரித்து சொந்த ஊருக்கு அனுப்பினர். வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த பவானி (வயது 55) என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் பவானிக்கு உடந்தையாக செயல்பட்ட அம்மு மற்றும் வீட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த அம்முவை (வயது 43), சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.


Next Story