தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது


தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது
x

நெல்லையில் தொழிலாளி கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் பேச்சிராஜா (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நெல்லை அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு (30), சுதர்சிங் (30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன் (20) ஆகிய 3 பேரும் தச்சநல்லூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கரையிருப்பு பகுதியை சேர்ந்த சுடலைமுத்து (65) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மாசானமூர்த்தியின் தந்தை ஆவார். அவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக நெல்லையை சேர்ந்த ஒருவர் குட்டிராஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் படத்துடன் பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story