கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது


கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் மினி லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரகசிய அறை அமைத்து கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 100 கிலோ கஞ்சா இருந்ததும், அவற்றை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரை சேர்ந்த வானுமாமலை மகன் தளவாய் மாடன் (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் 2 பேருக்கு தொடர்பு இருந்நது தெரியவந்தது.

இதையடுத்து தளவாய்மாடன் செல்போனுக்கு வரும் அழைப்புகளை போலீசார் கண்காணித்தனர். அதில் நேற்று தளவாய்மாடனை சந்திக்க இவரது செல்போனை ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து செல்போன் சிக்னல் உதவியுடன் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பதுங்கியிருந்த சாத்தான்குளம் கோமநேரியை சேர்ந்த சோலையப்பன் மகன் இசக்கிமுத்து (26) என்பவரை கைது செய்தனர்.


Next Story