வெள்ளகோவிலில் ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்ைத மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளகோவிலில் ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்ைத மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்ைத மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57). விவசாயி. இவர் நேற்று காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்நு ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் கோவை சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு வந்தார். பின்னர் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக்ெகாண்டு வெளிேய வந்தார்.
பின்னர் அந்த பணப்பையை ஸ்கூட்டர் இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். ிபின்னர் அங்கிருந்து வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து ஸ்கூட்டரை நிறுத்தினார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்று விட்டு திரும்பி வந்து ஸ்கூட்டரை எடுக்க சாவி போட்டு உள்ளார். அப்போது சாவி உள்ளே செல்லாததால் சந்தேகம் அடைந்த ராமலிங்கம் ஸ்கூட்டரின் சீட்டின் அடியில் இருந்த பணப்பை இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தார்.
திருட்டு
அப்போது பணம் இருந்த பையை காணவில்லை. வங்கியில் இருந்து எடுத்த ரூ.1 லட்சம் அதற்கு முன்பு பையில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் வங்கி காசோலை, வங்கி புத்தகம், ஆதார் அட்டை, காப்பீடு அட்டையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து வௌ்ளகோவில் போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமரா பழுதாகி இருப்பது தெரிவந்தது. இதனால் பணத்தை திருடி சென்ற ஆசாமியின் உருவம் பதிவாக வில்லை. இதையடுத்து அந்த பகுதியில் வேறு ஏதாவது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பட்டப்பகலில் விவசாயி ஸ்கூட்டரில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----