திருட்டு வழக்கில் ஒருவருக்கு ஜெயில் தண்டனை


திருட்டு வழக்கில் ஒருவருக்கு ஜெயில் தண்டனை
x

நாங்குநேரியில் திருட்டு வழக்கில் ஒருவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42). இவரது தம்பியான சுடலை மணி என்பவருக்கு கழுவூர் காலனியில் சொந்தமாக வீடு உள்ளது. இவர் சென்னையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சுடலைமணியின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் முத்துக்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துக்குமார் விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு ரிட்டா போஸ்ட் தெருவை சேர்ந்த சுடலைப்பழம் (44) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாங்குநேரி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபு சிதம்பரம் விசாரணை செய்து நடத்தி, சுடலைபழத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story