"ஒரே நாடு.. ஒரே தேர்தல்.."- அதிமுகவின் ஆதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி


ஒரே நாடு.. ஒரே தேர்தல்..-  அதிமுகவின் ஆதரவுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 2 Sept 2023 6:44 PM IST (Updated: 2 Sept 2023 6:54 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாடு.. ஒரே தேர்தலை திமுக எப்போதும் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது;

"அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் தேல்வியடைந்தனர். சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தனர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்தனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் எல்லா தோல்விகளையும் பார்ப்பதற்காக அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மொழி போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story