ராசிபுரம், திருச்செங்கோட்டில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு


ராசிபுரம், திருச்செங்கோட்டில்  ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு
x

ராசிபுரம், திருச்செங்கோட்டில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல்

ராசிபுரம், திருச்செங்கோட்டில் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தி.மு.க.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க. மற்றும் தேசிய திராவிட கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஒண்டிவீரன் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நகராட்சி தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய திராவிட கட்சி நிறுவன தலைவர் முருகேசன் வரவேற்றார்.

இதையடுத்து ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நகர அவைத்தலைவர் வைத்தீஸ்வரன், துணை செயலாளர்கள் மோகன், அருண்லால், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சுதா ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி ஆனந்த், அரசு சரவணன், தி.மு.க.வை சேர்ந்த கண்ணன், தேசிய திராவிட கட்சி நகர செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை

இதபோல் திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். இதையொட்டி அங்குள்ள அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர் சிவசங்கரன், துணை பொது செயலாளர் செல்வ வில்லாளன், மாநில தொண்டரணி செயலாளர் தமிழரசு, கவுன்சிலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story