கம்பத்தில்சாலையோரம் கிடந்த மருத்துவ கழிவுகள்
கம்பத்தில் சாலையோரம் மருத்துவ கழிவுகள் நடந்தன.
தேனி
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தாங்கள் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்களை இரவு நேரங்களில் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். இந்நிலையில் கம்பம் பகுதியில் ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள் அடங்கிய மருத்துவ கழிவுகள், புதுப்பட்டி-கூடலூர் புறவழிச்சாலையில் கம்பம்மெட்டு பிரிவு அருகே கொட்டப்பட்டுள்ளன. இதற்கிடையே உணவு தேடிவரும் மாடு, நாய்கள் குப்பை கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக்கை உண்பதால் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறுகிறது. எனவே ஆபத்தை ஏற்படுத்தும் மருத்துவக்கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story