ஆடி மாதப்பிறப்பையொட்டி அம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
ஆரணி ஆற்றங்கரை பவானி அம்மன் கோவிலில் ஆடி மாதப்பிறப்பையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முதல் 14 வாரங்கள் ஏராளமான பக்தர்கள் வந்து இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்நிலையில், நேற்று ஆடி மாதம் பிறந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கையில் வேப்பிலையுடன் மஞ்சள் ஆடை அணிந்து இக்கோவிலுக்கு நடந்து வந்தனர். பின்னர், கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டுச்சென்றனர். ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு திரண்டு வந்ததால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story