மாசிமக விழாவையொட்டி, கும்பகோணம் மகாமகம் குளத்தில் இன்று தீர்த்தவாரி


மாசிமக விழாவையொட்டி, கும்பகோணம் மகாமகம் குளத்தில் இன்று தீர்த்தவாரி
x
தினத்தந்தி 6 March 2023 7:27 AM IST (Updated: 6 March 2023 7:41 AM IST)
t-max-icont-min-icon

விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும்.

அதன்படி, நடப்பாண்டு மாசிமக விழா 6 சிவன்கோயில்களில் கடந்த 25-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 26-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று சண்டிகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், சோமேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது. மேலும், சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டம் காலை நடைபெறுகிறது.

பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது.


Next Story