மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டிஇரட்டை மாட்டுவண்டி பந்தயம்
கம்பம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
கம்பம் அருகே மஞ்சள்குளம் கிராமத்தில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டி சுருளிப்பட்டி-சுருளித் தீர்த்தம் சாலையில் நடந்தது. தேன் சிட்டு, தட்டான்சிட்டு, புள்ளிமான் சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என 5 பிரிவாக நடைபெற்ற போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 150 வண்டி மாடுகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர்.
மாடுகளின் வயதை பொறுத்து போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வென்ற மாடுகள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.