சுதந்திர தினவிழாவை முன்னிட்டுமுத்தாரம்மன் கோவிலில் அன்னதானம்
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் கோவிலில் அன்னதானம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடிகிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி போரூராட்சி மன்ற துணைதலைவர் மால் ராஜேஷ்,
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சுந்தரலிங்கம் மீனாட்சி, மதுரை அனிதா மெட்டல் கார்ப்பரேஷன் லிமிடெட் உரிமையாளர் சிவா, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் பகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோவிலுக்கு உபயமாக வந்த வேட்டி, சேலைகளை ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்ஆடிமாத கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது.மதியம் 2மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரம்கோவில் வளாகத்தை சுற்றி ரதவீதியுலா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.