சுதந்திர தினத்தையொட்டி காரைக்குடி, மானாமதுரை ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
சுதந்திர தினத்தையொட்டி காரைக்குடி, மானாமதுரை ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மானாமதுரை
சுதந்திர தினத்தையொட்டி காரைக்குடி, மானாமதுரை ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மானாமதுரை
வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மானாமதுரை ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
ரெயில் நிலைய வளாகம், வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். ரெயில்வே பாலத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் மானாமதுரை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ்கோடி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ரெயில்களில் பயணம் செய்த பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும், கார் நிறுத்தும் இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
காரைக்குடி
காரைக்குடி ரெயில் நிலையத்தில் சுதந்திர தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுதாமா, சேவுகன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ெரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் மற்றும் பாலங்கள் மெட்டல் டிடெக்டரால் சோதனையிடப்பட்டன. சந்தேக நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். கண்காப்பு கேமராக்களின் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே தண்டவாளங்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ெரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜ் மற்றும் தங்குமிடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.