குரு பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்-கலெக்டர்


குரு பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்-கலெக்டர்
x

திருவண்ணாமலையில் குரு பவுர்ணமி கிரிவலத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் ஆலோசனை வழங்கி பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குரு பவுர்ணமி கிரிவலத்தையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் ஆலோசனை வழங்கி பேசினார்.

குரு பவுர்ணமி

திருவண்ணாமலையில் பவுர்ணமிதோறும் தமிழகம், ஆந்திரா, ர்நாடகா உள்பட நாட்டின்பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து லையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமி குரு பவுர்ணமி என்பதால் அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்ல உள்ளனர்.

இதனையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கூறியதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்திற்கு பல்வேறு மாவட்டகளில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். குரு பவுர்ணமியை முன்னிட்டு 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

108 ஆம்புலன்சு

கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். அரசு போக்குவரத்து துறையின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தல் வேண்டும். காவல் துறை மூலம் பாதுகாப்பு பணிகளில் போலீசார் பணியில் ஈடுபடுத்த வேண்டும். எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்களை தடுத்து நடவடிக்கை எடுக்க நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துதல் வேண்டும்.

நகரில் 100 சதவீதம் கழிவறைகளை தூய்மைப்படுத்தவும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாகவும் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மின்சாரத்துறையின் மூலமாக கோவிலில் உள்ள முக்கிய இடங்கள், கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்லும் இடங்களில் தேவையான அளவிற்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். 108 ஆம்புலன்சு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் மூலமாக நெகிழிகளை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த பொது மக்கள், பக்தர்கள், வணிகர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.

பேனர்கள் அகற்றுதல்

மேலும் விதிகள் மீறி சாலைகளில் தற்காலிகமாக வைக்கப்படும் கடைகளை அகற்றுதல், விளம்பர பேனர்கள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story