வாடிப்பட்டி அருகே கோவில் விழாவையொட்டிஆட்டுஉரல், திருகுகல், உலக்கை அந்தரத்தில் தொங்கவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
வாடிப்பட்டி அருகே கோவில் விழாவையொட்டி ஆட்டுஉரல், திருகுகல், உலக்கை அந்தரத்தில் தொங்கவிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே கட்டகுளத்தில் செல்வ விநாயகர், முத்தாலம்மன் காளியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் கிராம கோவில்களுக்கு பழம் படைத்தல் நிகழ்ச்சியும், சுவாமி சிலை எடுத்தல், கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், 2-ம் நாள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. 3-ம் நாள் முளைப்பாரி கரைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் முத்தாய்ப்பாக காமாட்சி அம்மன் கோவில் முன்பாக பாரம்பரிய பண்பாட்டு பழக்க வழக்கங்களை கடை பிடிக்கும் வகையில் நேர்த்திக்கடனாக கற்றாழை பசையால் ஆட்டுஉரல், உலக்கை, திருகுகல் ஆகியவை ஒட்டப்பட்டு மலர்கள் சூட்டி கயிறில் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்க விடப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.