வார விடுமுறையையொட்டி சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி  சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வாரவிடுமுறையையொட்டி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

தேனி

சுருளி அருவி

உத்தமபாளையம் அருகே இயற்ைக எழில் சூழ்ந்த வனப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சுற்றுலா மற்றும் புண்ணிய தலமாக விளங்குகிறது. அருவிக்கு ைகவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் வாரவிடுமுறையான இன்று சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிக்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. இதனால் அருவி நுழைவு வாயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வனத்துறை வேன் மூலம் அருவி்க்கு அழைத்து வரப்பட்டனர்.

உற்சாக குளியல்

பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குடும்பத்தினருடன் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர். அருவியில் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

கடந்த சில நாட்களாக போதியளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது இல்லை என்று சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தபோதும் போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story