தேனி அருகே பயன்பாட்டுக்கு வந்த 4-வது நாளில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையில் விரிசல்


தேனி அருகே பயன்பாட்டுக்கு வந்த 4-வது நாளில்  திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையில் விரிசல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பயன்பாட்டுக்கு வந்த 4-வது நாளில் திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை சேதம் அடைந்தது.

தேனி


புதிய சாலையில் விரிசல்

திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் இது இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் பெரும்பகுதி பணிகள் நிறைவடைந்துள்ளது.

தேனி அருகே மதுராபுரியில் இருந்து வீரபாண்டி வரை பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நலன் கருதியும், தேனி நகருக்குள் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையிலும் இந்த புறவழிச்சாலை கடந்த 4 நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஒருபுறம் பணிகள் நடந்து வந்தாலும் விபத்து தடுப்பு நடவடிக்கையோடு சாலை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இந்த சாலையில் வீரப்ப அய்யனார் கோவில் சந்திப்பு சாலைக்கும், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஊருணிக்கும் இடைப்பட்ட பகுதியில் தனியார் மில் முன்பு ஒரு ஓடைபாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் பகுதியில் நேற்று சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. சாலையை இரண்டாக பிளந்தது போல் அந்த விரிசல் காட்சி அளித்தது. மேலும் பாலம் பகுதியில் சாலை பள்ளமாக இறங்கியது.

தடுப்புகள்

இதையடுத்து அந்த பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக சாலையில் சிவப்பு நிற கூம்பு தடுப்புகள் வைக்கப்பட்டன. தொழிலாளர்களும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தனர். பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட சில நாட்களில் சாலையில் விரிசல் ஏற்பட்டது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாலத்தில் ஏற்பட்ட விரிசலை ஆய்வு செய்வதோடு பிற பகுதிகள் உள்ள பாலத்தின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Related Tags :
Next Story