காந்தி ஜெயந்தியன்று '526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம்' - மாவட்ட கலெக்டர் உத்தரவு


காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு
x

காந்தி ஜெயந்தியன்று 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கண்டிப்பாக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத தொழில்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story