தூத்துக்குடி திரேஸ்புரத்தில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சத்தில் மீன்வலை பின்னும் கூடம்


தூத்துக்குடி திரேஸ்புரத்தில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சத்தில் மீன்வலை பின்னும் கூடம்
x

தூத்துக்குடி திரேஸ்புரத்தில், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சத்தில் மீன்வலை பின்னும் கூடம் திறப்புவிழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள மீனவர்களின் அத்தியாவசிய தேவையான வலைகளை பழுதுபார்ப்பதற்கான வலை பின்னும் கூடம் சேதம் அடைந்துவிட்டது. இதனால் அந்த இடத்தில் புதிதாக வலை பின்னும் கூடம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ரூ.15 லட்சம் செலவில் புதிய வலைபின்னும் கூடம் அமைக்கப்பட்டது. இந்த வலை பின்னும் கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு இறால் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க தலைவர் சந்தா பார்பர் தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் காப்பர் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் மீன் வலை பின்னும் கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் ஜேம்ஸ் டல்லஸ், ஜீடி பெர்னான்டோ, அஞ்சிதா மற்றும் பல்வேறு மீனவர் சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.


Next Story