கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலாரின் 200-வது ஆண்டு பெருவிழா


கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில்  வள்ளலாரின் 200-வது ஆண்டு பெருவிழா
x

கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலாரின் 200-வது ஆண்டு பெருவிழா நடைபெற்றது.

கடலூர்

கடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் 200-வது ஆண்டு பெருவிழா நேற்று கடலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலை நிறுவனர் சாது சிவராமனார் தலைமை தாங்கினார். தலைவர் தேவராஜ், துணை தலைவர் வெற்றிவேல், செயலாளர் சபாபதி, பொருளாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ. அய்யப்பன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நற்கருங்குழி கிஷோர்குமாரின் வில்லுபாட்டு நிகழ்ச்சியும், மழையூர் சதாசிவம், ஜீவசீனுவாசன் ஆகியோரது திருவருட்பா இன்னிசையும் நடைபெற்றது.

சொற்பொழிவு

தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக மாநில பொது செயலாளர் வெற்றிவேல், வள்ளலாரும், பஞ்சபூதங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் வள்ளலார் 200-வது ஆண்டு விழா தமிழ்நாடு அரசு சிறப்பு குழு அருள், 19-ம் நூற்றாண்டின் உண்மை பொது நெறி என்ற தலைப்பிலும், விழுப்புரம் அருள்மாளிகை நிறுவனர் அண்ணாமலை பரதேசி சுத்த சன்மார்க்கத்தின் தடைகள் குறித்தும், சொற்பொழிவாற்றினர்.

இதில் புதுச்சேரி தலைமை சன்மார்க்க சங்கம் அருட்பா அருணாசலம், புதுச்சேரி சங்க தலைவர் கணேசன், கோதண்டபாணி, ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர்கள் விஜயகுமார், அரிஹந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வழிகாட்டுதல் குழு வெண்புறா குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அன்னதானம்

முன்னதாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன் ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், சதிஷ்குமார், தெய்வநாயகம், அருண், நிலா ஓட்டல் தங்கராசு, திலகர் உள்பட பலர் உடனிருந்தனா்.


Next Story