தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கம் சார்பில்சுகாதார அங்காடி திறப்பு


தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கம் சார்பில்சுகாதார அங்காடி திறப்பு
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கம் சார்பில் சுகாதார அங்காடி திறக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூர்த்தி தெருவில் 'சுகாதார அங்காடி' அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பொறுப்பாளர் சாம் டேனியல்ராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். கூட்டுறவு துணை பதிவாளர் ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுகாதார அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த சுகாதார அங்காடியில் தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் மூலம் தயாரிக்கப்படும் பினாயில், கிருமி நாசினி மருந்துகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுறவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி தொழிலாளர் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பி.கணேசன், துணைத் தலைவர் சுந்தரவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story